டிபிஎஸ் காருக்கு மாற்றாக புதிய கார்: அஸ்டன் மார்ட்டின் அறிமுகம்
டிபிஎஸ் காருக்கு மாற்றாக வாங்கிஷ் என்ற புதிய ஸ்போர்ட்ஸ் காரை அஸ்டன் மார்ட்டின் அறிமுகம் செய்துள்ளது.
டிபிஎஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த 6.0 லிட்டர் வி12 எஞ்சினை மேம்படுத்தி இதில் பொருத்தியிருக்கிறது அஸ்டன் மார்ட்டின். இந்த எஞ்சின் 565 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் திறன் கொண்டது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளி்ல கடந்து விடும்.

ஒன்-77 காரின் வடிவமைப்பிலிருந்து சிலவற்றை உருவி இந்த காரில் பயன்படுத்தியிருக்கிறது அஸ்டன் மார்ட்டின். வாங்கிஷ் பற்றி அஸ்டன் மார்ட்டின் சிஇஓ குறிப்பிடுகையில்," வடிவமைப்பு, தொழில்நுட்பம் என அனைத்திலும் அஸ்டன் மார்ட்டினின் வலிமையை பரைசாற்றும் விதத்தில் வாங்கிஷ் இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகர்களின் வீர தீர சாகத்தை பரைசாற்றுவதில் அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வரிசையில், அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த டிபிஎஸ் காருக்கு பதிலாக இந்த புதிய வாங்கிஷ் கார்கள் இனி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
வாங்கிஷ் காருக்கு ரூ.1.66 கோடி விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தியாவிலும் இந்த காரின் விலை உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








