இந்தியாவிலேயே க்யூ-3 உற்பத்தி செய்ய ஆடி திட்டம்: விலை குறைய வாய்ப்பு
இந்தியாவிலேயே க்யூ-3 எஸ்யூவியை அசெம்பிள் செய்ய ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. க்யூ-7 எஸ்யூவி காரை சமீபத்தில் தனது அவுரங்காபாத் ஆலையில் அசெம்பிள் செய்யும் பணிகளை துவங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது க்யூ-3 எஸ்யூவியையும் இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது. க்யூ-3 எஸ்யூவி ரூ.26.21 லட்சம் முதல் ரூ.34.4 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், க்யூ-3 இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டால் விலை மேலும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

எக்கச்சக்க டிமான்ட்
க்யூ-3 எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்போது விலை குறையும் என்பதால் விற்பனை இன்னமும் அதிகரிக்கும்.

எஞ்சின்
174 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் க்யூ-3 கிடைக்கிறது.

அவுரங்காபாத் ஆலை
அவுரங்காபாத்திலுள்ள ஆடி கார் ஆலையில் இரண்டு ஷிப்ட் மூலம் ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஆண்டுக்கு 8,000 நெருங்கிய கார்களை இந்தியாவில் ஆடி உற்பத்தி செய்கிறது. க்யூ-3 உற்பத்தி துவங்கினால் இந்த ஆலை முழு உற்பத்தி திறனை எட்டும்.

ஆலை விரிவாக்கம்
க்யூ- 3 உற்பத்தி துவங்கப்பட்டால் அடுத்த ஆண்டு இறுதியில் அவுரங்காபாத் ஆலையை விரிவுப்படுத்த ஆடி திட்டமிட்டுள்ளது.

கேம் சேஞ்சர்
பிஎம்டபிள்யூவை முதலிடத்தில் இருந்து கீழே இறக்குவதற்கான முயற்சியாகவே க்யூ-3 உற்பத்தியை இந்தியாவில் ஆடி துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








