லிட்டருக்கு 120 கிமீ மைலேஜ் தரும் காரை தயாரிக்கும் ஆடி

லிட்டருக்கு 120 கிமீ மைலேஜ் தரும் புதிய ரக டீசல் காரை ஆடி நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

Audi City Car

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஆடியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 என்ற கான்செப்ட் காரை பார்வைக்கு வைத்திருந்தது. இந்த கார் லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வந்த பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கார்களில் இதுவும் ஒன்று.

எக்ஸ்எல்-1 காரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட 800 சிசி டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகனின் எக்ஸ்எல்-1 கான்செப்ட் காரை போன்று அதிக மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்த உள்ளது ஆடி.

ஆடியின் ஏ-1 காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த கார் நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். 4 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்டதாக வரும் இந்த கார் லிட்டருக்கு 120 கிமீ மைலேஜ் தருமாம். இதில், புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்துகிறது ஆடி. மேலும், அதிக மைலேஜ் தருவதற்காக இலகு எடை உதிரிபாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஆடியின் நேரடி போட்டியாளரான பிஎம்டபிள்யூ நிறுவனம் 'ஐ' வரிசையில் பல புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. இந்த கான்செப்ட் கார்கள் விற்பனைக்கு வரும்போது தனது விற்பனை வளர்ச்சி பாதித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த புதிய குட்டிக் காரை ஆடி தயாரித்து வருகிறது.

இந்த புதிய காரின் விலை மற்றும் அறிமுக விபரங்கள் குறித்து ஆடி நிறுவனம் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 5, 2012, 10:37 [IST]
English summary
German car maker Audi is planning to launch a perfect city car. The new car mileage will be 120 kmpl.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+