யூஸ்டு கார் விற்பனையில் இறங்கும் ஆடி

4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான பயன்படுத்தப்பட்ட ஆடி சொகுசு கார்கள் அப்ரூவ்டு ப்ளஸ் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன. ஆடியின் தற்போதைய அங்கீகாரம் பெற்ற பல டீலர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஷோரூம்களையும் திறப்பதற்கு முன் வந்துள்ளனர்.
எனவே, கூடிய விரைவில் ஆடி அப்ரூவ்டு ப்ளஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. பல்வேறு காரணங்களால் புதிய கார் வர்த்தகத்தில் சிறிது மந்தநிலை நீடிப்பதால் பயன்படுத்தப்பட்ட கார் வர்த்தகம் மூலம் அதனை ஈடுகட்ட ஆடி திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், ஆடியின் சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு கடன் வசதி வழங்கப்படும். இதேபோன்று, சர்வீஸ் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். அடுத்த மாதம் தனது பயன்படுத்தப்பட்ட கார் வர்த்தகத்தை முறைப்படி துவங்க ஆடி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








