ஒரு மாதத்திற்கு முன்பே விற்பனை இலக்கை கடந்த ஆடி

வடிவமைப்பு, வசதிகள் மற்றும் தரம் என அனைத்திலும் ஆடி கார்கள் குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுவிட்டன. இதனால், சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி அதிவேக வளர்ச்சியை பெற்று வருகிறது.
நடப்பு ஆண்டில் 8,000 கார்களை விற்பனை செய்ய ஆடி இலக்கு வைத்திருந்தது. ஆனால், ஆண்டு முடிவடைய ஒரு மாதத்திற்கு முன்னரே அந்த இலக்கை எட்டிவிட்டது ஆடி. கடந்த மாதம் 805 கார்களை விற்பனை செய்துள்ளது. நவம்பர் வரையிலான கணக்குப்படி இந்த ஆண்டில் மொத்தமாக 8,072 கார்களை விற்பனை செய்து இலக்கை தாண்டிவிட்டது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை 58 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கிறது. விற்பனை இலக்கை கடந்ததோடு திருப்திபட்டுக் கொள்ளாமல் தனது இலக்கை மீண்டும் மாற்றியுள்ளது. இந்த ஆண்டுக்கான இலக்கை 8,600 கார்களாக உயர்த்தியுள்ளது ஆடி. சந்தை மந்தமான நிலையிலும் விற்பனை இலக்கை முன்கூட்டியே கடந்திருப்பது குறித்து ஆடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








