ஆடி கார்கள் மீது பாலிவுட்டுக்கு வந்த மோகம்

பாலிவுட்டின் மனங்கவர்ந்த கார் பிராண்டாக ஆடி மாறியிருக்கிறது. ஆடி கார் இல்லாத பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. க்யூ-7 மற்றும் ஏ-8 சொகுசு செடானுடன் மார்க்கெட்டில் நுழைந்த ஆடி பிற நிறுவனங்களை காட்டிலும் குறுகிய காலத்தில் வெகு பிரபலமான பிராண்டாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆடி கார்கள் மீது பாலிவுட்டுக்கு வந்த மோகம் கூட ஆடிக்கு இலவச பப்ளிசிட்டியாக மாறியுள்ளது. ஆடி கார் வைத்திருக்கும் பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் சிலரை ஸ்லைடரில் காணலாம்.

 ஆடி பிரியர் ஜான் ஆபிரஹாம்

ஆடி பிரியர் ஜான் ஆபிரஹாம்

கடந்த ஆண்டு ஆடி க்யூ-7 காரை வாங்கி தனது நீண்ட நாள் ஆசையை தீர்த்துக் கொண்ட பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் கடந்த மாதம் தனது சகோதரர் மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடி க்யூ-3 எஸ்யூவியை பரிசளித்துள்ளார்.

அபிசேக் பச்சன்

அபிசேக் பச்சன்

கடந்த ஆண்டு தனது மகள் ஆராத்யா பிறந்தவுடன் ஆடி ஏ8 எல் காரை வாங்கினார் அபிசேக் பச்சன். ஆராத்யா செல்வதற்காக இந்த காரை வாங்கியதாக அவர் குறிப்பிட்டது நினைவிருக்காலம்.

'நம்ம' அசின்கிட்டயும் ஆடி

'நம்ம' அசின்கிட்டயும் ஆடி

நடிகை அசின் ஆடி க்யூ-7 காரை வைத்திருக்கிறார். முக்கிய விழாக்களுக்கு இந்த காரில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பிபாசா பாசுவிடம் ஆடி

பிபாசா பாசுவிடம் ஆடி

ஆடி கார் பாலிவுட் பிராண்டு என்றாகிவிட்டது என்பதால் பிபாசாவும் இந்த அணியில் சேர்ந்துவிட்டார்.

திவ்யா மிர்சா

திவ்யா மிர்சா

மாடல் துறையில் இருந்து பாலிவுட்டுக்கு புலம் பெயர்ந்த நடிகை திவ்யா மிர்சாவிடம் கருப்பு நிற ஆடி க்யூ-7 எஸ்யூவி உள்ளது.

குல் பனாக்

குல் பனாக்

சாகச விரும்பியான நடிகை குல்பனாக்கிடம் ஆடி க்யூ-7 எஸ்யூவி உள்ளது.

கேத்ரீனா கைஃப்

கேத்ரீனா கைஃப்

கனவு நாயகி கேத்ரீனா கைஃப் க்யூ-7 எஸ்யூவியை வைத்திருக்கிறார்.

கஜோல்

கஜோல்

பிரபல நடிகை கஜோலும் வெள்ளை நிற ஆடி க்யூ-7 எஸ்யூவியை வைத்துள்ளார்.

'ஆடிவுட்' ஆன பாலிவுட்...?!

ரன்பீர் கபூரிடமும் ஆடி க்யூ-7 எஸ்யூவி உள்ளது.

சல்மான்கான்

சல்மான்கான்

பாடி கார்ட் படத்தில் ஆடி பிராண்டை பிரபலப்படுத்தியதற்கு நன்றி பாராட்டும் வகையில் க்யூ-7 எஸ்யூவியை சல்மான்கானுக்கு பரிசாக வழங்கியிருக்கிறது ஆடி.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

கார் கலெக்ஷனில் பிரபலமான சஞ்சய்தத் கேரேஜில் ஆடி எஸ்யூவியும் இடம்பிடித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 8, 2012, 16:22 [IST]
English summary
Audi, the German premium carmaker has emerged as one of the most favoured car brand by Bollywood celebrities. Audi India chief Michael Perschke has been very vocal about the celebrities he has been able to attract to the brand with the four rings.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+