அசத்தலான ஹைபிரிட் சூப்பர் காரை தயாரிக்கும் ஆடி
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்றாலும் மனநிறைவு பெறாத ஆடி புதிய சூப்பர் காரை தயாரித்து வருகிறது. ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய சூப்பர் கார் 2016ம் ஆண்டில் மார்க்கெட்டுக்கு வருகிறது. ஆர் 20 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த சூப்பர் காரில் வி6 டீசல் எஞ்சின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தில் ஆடி விற்பனை செய்து வரும் ஆர்8 காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அடுத்து அதே வரிசையில் தற்போது ஆ20 ஹைபிரிட் சூப்பர் காரை ஆடி அறிமுகப்படுத்த உள்ளது. ஆர்20 சூப்பர் கார் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிளாட்ஃபார்ம்
லீமேன்ஸ் எல்எம்பி 1 ரேஸ் கார் பிளாட்பார்மில் இந்த புதிய சூப்பர் கார் வடிவமைக்கப்படுகிறது.

எஞ்சின்
ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த சூப்பர் காரில் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்படுகிறது. மேலும், ஆடியின் இ-குவாட்ரோ தொழில்நுட்பம் கொண்ட இந்த காரின் முன்பக்க சக்கரங்களில் 2 எலக்ட்ரிக் மோட்டார்களும் பொருத்தப்பட்டு இருக்கும். டீசல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டார்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது அதிகபட்சமாக 700 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும்.

மொத்த உற்பத்தி
மொத்தம் 100 முதல் 250 ஆர் 20 சூப்பர் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.

அறிமுகம்
2016ம் ஆண்டு கலிபோர்னியாவில் பெப்லி பீச் ஆட்டோமோட்டிவ் திருவிழாவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சம் மணிக்கு 321 கிமீ வரை பறக்கும் திறன் கொண்டிருக்கும்.
Image Source: Automobilemag


Click it and Unblock the Notifications








