வெறும் ரூ.21,499 ல் அசத்தலான ஆடி பிராண்ட் கைக்கடிகாரம்!
ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய பிரிமியம் கைக்கடிகாரத்தை ஆடி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டைல், தரம், வசதிகள் என்று அனைத்திலும் ஆடி கார்கள் நவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக விளங்குவது போன்றே மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் இந்த கைக்கடிகாரம் வந்துள்ளது.

ஸ்டாப்வாட்ச், நீர் புகாத தொழில்நுட்பம், வேகத்தை அளவிட உதவும் கருவி என ஏராளமான அம்சங்களுடன் இந்த கைக்கடிகாரம் கொண்டுள்ளது. கருப்பு நிற டயல், கருப்பு நிற தோல்வாருடன் வந்திருக்கும் இந்த கைக்கடிகாரம் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தின் புதிய அடையாளமாக இருக்கும்.
நாட்டின் அனைத்து ஆடி டீலர்ஷிப்புகளிலும் இந்த கைக்கடிகாரம் கிடைக்கும். ரூ.21,499 என்ற மிகக் குறைவான விலையில் இந்த கைக்கடிகாரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஜெர்மனி தயாரிப்பான இந்த கைக்கடிகாரம் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








