எஸ்4 பிரிமியம் செடான் காரை அறிமுகம் செய்த ஆடி
ரூ.45 லட்சம் விலையில் தனது பவர்ஃபுல் எஸ்4 செடான் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஆடி.
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி படு வேகமாக வளர்நது வருகிறது. தனது விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்த புதிய மாடல்களை அடுத்தடுத்து வரிசை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், பிரிமியம் கார் மார்க்கெட்டில் அனைத்து ரகத்திலும் கார் மாடல்கள் இருக்க வேண்டும் என்று ஆடி விரும்புகிறது. இதற்காக, புதிய எஸ்4 பிரிமியம் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஆடி கார் நிறுவனம்.
எஸ்4 செடான் காரில் அதிக ஆற்றல் கொண்ட 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 333 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் கொண்டுள்ள இந்த காரில் டிஎஸ்ஜி டூயல் கிளட்ச் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் ஆற்றலில் பின்னும் அதேவேளையில் மைலேஜிலும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 10.44 கிமீ மைலேஜ் செல்லும் என்று ஆடி தெரிவித்துள்ளது.
ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகல், பிளாட்டினம் கிரே ரேடியேட்டர் கிரில், 18 இஞ்ச் அலாய் வீல் என எஸ்4 கண்களை வெகுவாக கவர்கிறது. இதுதவிர, பயணிகளுக்கான சிறப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லாத பிரிமியம் காராக எஸ்4 விற்பனைக்கு வந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் இந்த கார் ரூ.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








