அகமதாபாத்தில் ஆடியின் மிகப்பெரிய கார் ஷோரூம் திறப்பு
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மிகப்பெரிய ஆடி கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கும் சொகுசு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இதற்காக, பிரம்மாண்டமான கார் ஷோரூம்களை திறந்து வருகின்றன.
டெல்லி அருகே பரீதாபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூமும், கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய வால்வோ ஷோரூமும் சமீபத்தில் திறக்கப்பட்டன. இந்த நிலையில், அகமதாபாத் நகரில் குஜராத்தின் மிகப்பெரிய ஆடி கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

ஆடியின் புதிய கார் ஷோரூம் திறப்பு!
உலக தரத்திற்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூமை ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மைக்கேல் பெர்ஷகே திறந்து வைத்தார்.

ஆடியின் புதிய கார் ஷோரூம் திறப்பு!
22,354 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட ஷோரூமின் முகப்பு ஆடி நிறுவனத்தின் பிரத்யேக ஹனிகோம்ப் அலுமினியம் பேப்ரிகேஷன் டிசைனுடன் கட்டப்பட்டுள்ளது.

ஆடியின் புதிய கார் ஷோரூம் திறப்பு
இந்த புதிய ஷோரூமில் ஒரே நேரத்தில் 12 கார்களை பார்வைக்கு நிறுத்தி வைக்க முடியும்.

ஆடியின் மிகப்பெரிய கார் ஷோரூம்
இந்த ஷோரூமில் ஆடி பிராண்டட் ஆக்சஸெரீஸ்கள் விற்பனையகம், சொகுசு வசதிகளுடன் கூடிய வாடிக்கையாளர்களுக்கான ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டிருக்கிறது.

சர்வீஸ் மையம்
ஷோரூமுடன் இணைந்ததாக 18,880 சதுர அடி பரப்பில் சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 12 கார்களை சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட இந்த சர்வீஸ் மையத்தில் நாள் ஒன்றுக்கு 24 கார்களை சர்வீஸ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








