இலவச சர்வீஸ் மேளாக்கள் சுத்த வேஸ்ட்?- நீங்க என்ன சொல்றீங்க
கார் நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கும் இலவச சர்வீஸ் மேளாக்களால் பயன் ஏதும் இல்லை என்று பெரும்பாலோனோர் கருத்து தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்களின் நலன் கருதி இலவச சர்வீஸ் மேளாக்களை அனைத்து முன்னணி கார் நிறுவனங்கள் அவ்வப்போது நடத்தி வருகின்றன. இந்த சர்வீஸ் மேளாக்களில் பேட்டரி செக்கப், எலக்ட்ரிக்கல் செக்கப், ஏசி உள்ளிட்ட ஏராளமான சோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம் என கார் நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
இதேபோன்று, ஸ்பேர்ட் பார்ட்ஸ் உள்ளிட்டவற்றிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், இதுபோன்ற இலவச சர்வீஸ் மேளாக்களில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு காரை சர்வீஸ் செய்தபின் கசப்பான அனுபவமே மிச்சமாகிறது.

'கடமைக்கு' கார் வாஷ்
சாதாரண நேரங்களில் கார் வாஷ் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதால் சிறப்பாக செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இலவச சர்வீஸ் மேளாக்களில் 'கடமை'க்கு சர்வீஸ் செய்கின்றனர். மேலும், அன்டர் பாடி சர்வீஸ் சில சமயங்களில் பெயரளவுக்கு செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.

கண்துடைப்பு செக்கப்
இலவச சர்வீஸ் மேளாக்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் சர்வீஸுக்கு வருவதால் கார் சர்வீஸ் சென்டர்களில் இருக்கும் பணியாளர்களால் கவனித்து பார்க்க முடிவதில்லை. பானட்டை திறந்து பார்ப்பர்களே தவிர பிரச்னைகளை மேலோட்டமாக சரி செய்து கொடுத்து விடுவதாக பலர் கூறுகின்றனர்.

ஆயில் சேஞ்ச்
ஆயில் மாற்றும்போது கூட அவர்கள் கவனித்து செயல்படுவதில்லை. சரியான அளவு ஆயில் இருக்கிறதா. எவ்வளவு டாப் அப் செய்ய வேண்டும் என்பதில் கூட கவனம் செலுத்துவதில்லை.

தூசியுடன் வரும் கார்
சில சமயம் காருக்குள் இருக்கும் தூசிகளை கூட சரியாக துடைக்காமல் சர்வீஸ் முடிந்துவிட்டது என்று கையில் சாவியை கொடுக்கும் நிலை இருக்கிறது.

ஆள விடுங்க...!!
சர்வீஸ் சூப்பர்வைசரும் ஏராளமான கார்களை டெலிவிரி கொடுப்பதில் பிஸியாக இருப்பதும், அப்பாடா கார் கைக்கு கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

இதுதான் புத்திசாலித்தனம்
இதுபற்றி கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கும் தெரிந்த மெக்கானிக்கிடம் கேட்டபோது, இதுபோன்ற இலவச சர்வீஸ் மேளாக்களில் காரை விடுவதை தவிர்த்து விடுங்கள் என கூறினார்.

மார்க்கெட்டிங் யுக்தி?
இந்த இலவச சர்வீஸ் மேளாக்களால் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே பலன் கிடைக்கிறதா, அல்லது விற்பனைக்கு பிந்தைய சேவையில் நாங்கள்தான் பெஸ்ட் என்று மறைமுகமாக தெரிவிக்கும் மார்க்கெட்டிங் யுக்தியா.

நீங்களும் சொல்லுங்கள்!
இலவச சர்வீஸ் மேளாக்களுக்கு போகலாமா, வேண்டாமா?.. உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிற வாசகர்களுக்கும் உங்களது அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








