தண்ணீரிலும், தரையிலும் செல்லும் புதிய எஸ்யூவி: ரஷ்யாவில் அறிமுகம்

எஸ்யூவி கார்கள் பொதுவாக ஆப் ரோடு சாகசங்களுக்கும், கரடு முரடான சாலை நிலைகளிலும் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், சில கார்கள் வடிவமைப்பில் எஸ்யூவி போன்று இருந்தாலும் ஆப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அது நகர்ப்புற சாலைகளை மனதில் வைத்தே வடிவமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், எந்தவொரு சாலைகளில் செல்வதோடு மட்டுமல்லாது தண்ணீரிலும் செல்லும் புதிய எஸ்யூவி கார் ஒன்றை ரஷ்யாவை சேர்ந்த அவ்டோரஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாஸ்கோவில் நடந்த மோட்டார் ஷோவில் சாமன் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி முதன்முதலில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அசகாய சூரன் சாமன்

அசகாய சூரன் சாமன்

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கவச வாகனம் போல் இருக்கும் இந்த எஸ்யூவியில் 8 ராட்சத வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சக்கரத்தையும் தனித்தனியாக கன்ட்ரோல் செய்ய முடியும் என்பதே இந்த எஸ்யூவியின் ஹைலைட்.

தங்கு தடையில்லா பயணம்

தங்கு தடையில்லா பயணம்

பனி படர்ந்த சைபீரிய கண்டத்திலும், கரடு முரடான மலைச்சாலைகளிலும், ஏன் வழியில் ஏதெனும் ஆறுகள் அல்லது நீர் நிலைகள் குறுக்கிட்டால் கூட தண்ணீரில் இறங்கி அசராமல் நீந்திச் செல்லும். தண்ணீரிலும் செல்லும் வடிவமைப்பை கொண்டிருப்பதால் இதன் கேபினுக்குள் ஒரு சொட்ட நீர் கூட புக முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவர் காக்பிட்

டிரைவர் காக்பிட்

டிராக்டரில் இருப்பது போன்று இந்த எஸ்யூயிவில் ஸ்டீயரிங் வீல் நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. வீல்களை தனித்தனியாக கட்டுப்படுத்தும் பட்டன்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் டிரைவர் எளிதாக இயக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இருக்கை வசதி

இருக்கை வசதி

6.3 மீட்டர் நீளமும், 2.5 மீட்டர் அகலமும், 2.7 மீட்டர் உயரமும் கொண்ட இந்த எஸ்யூவியில் உட்புறம் மிக தாராள வசதியை கொண்டிருப்பதால் 10 பேர் பயணம் செய்ய முடியும். இரண்டு வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரத்யேக தொழில்நுட்பம்

பிரத்யேக தொழில்நுட்பம்

பனிப் பிரதேசங்கள், நீர் நிலைகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லும் ஆய்வாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும். பனிப் பிரதேசங்களில் செல்லும்போது பனியை விலக்கிச் செல்லவும், தண்ணீரில் செல்வதற்கும் சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது..

பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம்

45 டிகிரி கோணத்தில் சாய்ந்து செல்லும்போது கூட கவிழாத அளவுக்கு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மல்லுக் கட்டும் சாமன்

மல்லுக் கட்டும் சாமன்

படத்தில் காண்பது போன்ற சாலைகளில் வீல்களை தனித்தனியாக கன்ட்ரோல் செய்து எளிதாக முன்னேற முடியும். இந்த எஸ்யூவியி்ல் 170 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இவெகோவின் டீசல் எஞ்சினும், 178 பிஎச்பி மற்றும் 240 பிஎச்பி ஆற்றல்களை வெளிப்படுத்தும் ஹூண்டாயின் 2.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

இரும்பு மீன்

இரும்பு மீன்

தண்ணீரில் மீன் போன்று லாவகமாக நீந்தி வரும் சாமன். ரஷ்யாவில் இந்த எஸ்யூவி ரூ.83,000 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது இறக்குமதி வரியை சேர்த்தால் விலை இரு மடங்காகும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 1, 2012, 16:43 [IST]
English summary
Avtoros Shaman, A amphibian SUV has revealed in Moscow Motor Show. The vehicle capable of displaying extreme competence both on land and in water. The vehicle has four axles and 8 giant tyres, all of which can be controlled independently, if necessary. 8 tires also helps to deal with all types of terrain.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+