அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது பஜாஜ் குட்டி
{image-18-bajajare60(16)300.jpg tamil.drivespark.com}அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது முதல் 4 சக்கர வாகனத்தை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொணடு வர திட்டமிட்டுள்ளது பஜாஜ் ஆட்டோ.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது புதிய 4 சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக விறபனைக்கு விட திட்டமிடப்பட்டுள்ள இந்த குட்டி பயணிகள் வாகனம் அறிமுகம் குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் உலவி வந்தன.
இதற்கு தற்போது பஜாஜ் ஆட்டோ முற்றுப் புள்ளி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய குட்டி பயணிகள் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மூத்த துணைத் தலைவர் எஸ்.ரவிக்குமார் கூறுகையில்," நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் எங்களது 4 சக்கர வாகனத்தை வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
பஜாஜ் வடிவமைத்துள்ள புதிய 4 சக்கர பயணிகள் வாகனம் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய ஆட்டோ ரிக்ஷாவுக்கு சரியான மாற்று வாகனமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








