புதிய நடமாடும் சொகுசு வீடுகள்: பேஸ்கேம்ப் அறிமுகம்

பேஸ்கேம்ப் கேரவன்
சாகச பயண ஏற்பாட்டாளரான பேஸ்கேம்ப் நிறுவனம் தற்போது கேரவன் விற்பனையிலும் இறங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 2 புதிய கேரவன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹைமர் ஸ்போர்ட்டிங் 465 மற்றும் டெத்லெஃப்ஸ் நியூ லைன் 410 கே என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஜெர்மன் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டிருக்கின்றன.

படுக்கை வசதி, சமயலறை, டிவி, பாத்ரூம், ஃபிரிட்ஜ், டைனிங் அறை என ஏராளமான வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த கேரவன் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும், இந்த கேரவனின் மின் தேவைக்காக ஜெனரேட்டரும் உள்ளது.

ஆர்டர் கொடுத்து 45 நாட்கள் முதல் 90 நாட்களில் கேரவன்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைமர் ஸ்போர்ட்டிங் 465 ரூ.16 லட்சத்திலும் கூடுதல் வசதிகள் கொண்ட டெத்லெஃப்ஸ் நியூ லைன் 410 கே மாடல் ரூ.22 லட்சத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதுதவிர, இறக்குமதி வரியை கூடுதலாக செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள 15 அலுவலகங்கள் வழியாக இந்த கேரவன்களை விற்பனை செய்ய இருப்பதாக பேஸ்கேம்ப் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக, ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 13, 2012, 16:01 [IST]
English summary
Mumbai based Basecamp has launched Two variants of caravans, Hymer Sporting 465 and Dethleffs New Line 410 TK are being offered by the company at a price of Rs 16 lakhs and Rs 22 lakhs respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+