பென்ஸ் சி க்ளாஸ் பெர்ஃபார்மென்ஸ் எப்படி?

கியர் லிவரில் பார்க்கிங், ரிவர்ஸ், நியூட்ரல் மற்றும் டி+ ஆகிய ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. டி+ க்கு கியரை மாற்றி ஆக்சிலேட்டரை கொடுத்தால் போதும். சி க்ளாஸ் சிட்டாய் பறக்கிறது. அதேவேளை, டீசல் எஞ்சின் என்றாலும் ஸ்மூத்தாக இருப்பதால் கேபினுக்குள் காரின் வேகம் தெரியவில்லை.

204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இதன் எஞ்சின் ஓவர்டேக் செய்யும்போது சிறப்பான பிக்கப்பை கொடுப்பதால் சிரமமில்லை. மேலும், ஓவர் டேக்கின்போது லேன் மாறும்போதும் வெகு சீக்கிரமாக திரும்புவதற்கும் இலகுவாக இருக்கிறது.

டெஸ்ட் ட்ராக்கில் வைத்து மணிக்கு 130 கிமீ வேகத்தை தாண்டிய போதும் பிரேக் நச்சுன்னு இருப்பதால் எந்தவொரு அச்சமும் இல்லை. இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் இருப்பதால், சடன் பிரேக் அடித்தபோது அடுத்த ஓரிரு மீட்டருக்குள் கார் நின்று விட்டது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளதால் அடிக்கடி கியர் மாற்றும் வேலையை இல்லை. மேலும், இடது கையை வசதியாக வைத்துக் கொண்டு அலுப்பில்லாமல் ஓட்ட ஆர்ம் ரெஸ்ட் இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் மிகச் சிறப்பாக இருக்கிறது. குண்டு குழியுமான சாலையில் இறக்கி சோதனை செய்தபோது காருக்குள் அதிர்வுகள் அதிகமாக தெரியவில்லை.

போக்குவரத்து மிகுந்த நகர சாலை மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலும் லாவகமாக ஓட்டுவதற்கு சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கிறது சி க்ளாஸ். 4591மிமீ நீளம் கொண்ட காராக இருந்தாலும் ஓட்டும்போது பெரிய காரை ஓட்டும் உணர்வு இல்லை.

இதன் ஸ்டீயரிங் வீல் கொடுத்த கட்டளையை ஏற்று நினைக்கும் இடத்தில் ஒரு இம்மி கூட பிசகாமல் திரும்புகிறது. சில கார்களில் யு டரன் போடும்போது அவஸ்தை கொடுக்கும். ஆனால், சி க்ளாஸில் யு டர்ன் போடுவது அல்வா சாப்பிடுவது போன்று இருக்கிறது. அத்துனை நேர்த்தியான ஸ்டீயரிங் சிஸ்டம்.

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள் உள்ளன. ஸ்டீயரிங் வீலுக்கு கீழே நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது.இதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொண்டால் பொழுதுபோக்கு மற்றும் வழிகாட்டும் தகவல்களை பெற முடியும்.

முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் டேஷ்போர்டுக்கு மேலே கண்ணாடி இணையும் இடத்தில் பார்க்கிங் சென்சாருக்கான விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்க்கிங் செய்யும்போது மட்டுமின்றி குறுகலான சாலைகளிலோ அல்லது மெதுவாக செல்லும்போதோ பிற வாகனங்களை இடிக்கும் வகையில் சென்றால் கூட பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கிறது.

66 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருப்பதால் அடிக்கடி பெட்ரோல் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்கும். அதிக மைலேஜ் மற்றும் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் ப்ளூ எபிசியன்சி தொழில்நுட்பத்தை சி க்ளாஸ் கொண்டிருக்கிறது.

லிட்டருக்கு நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 14 கிமீ வரை மைலேஜ் கொடுப்பதாக காரை எடுத்து வந்த பென்ஸ் நிறுவன டிரைவர் கூறினார். டெஸ்ட் ட்ரைவ் முடிந்து திரும்பும்போது மாலை வேளை நெருங்கியபோது ஹெட்லைட்டுகள் சென்சார் உதவியுடன் தானாக எரிந்தன. இதேபோன்று, மழை வந்தால்கூட தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர் வசதியும் உள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஆடி ஏ4 கார்களுடன் போட்டி போடும் பென்ஸ் சி க்ளாஸ் கார் 40 லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கும் வாடிக்கையாளர்களை நிச்சயம் ஏமாற்றாது என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 21, 2012, 10:21 [IST]
English summary
Drivespark had an opportunity to test drive the C 250 CDI Bluemotion premium sedan and we would like to share our experience with our viewers. It was a pleasant surprise indeed when Drivespark was informed about the opportunity to drive the Mercedes C-Class. The team was looking forward to see the car in the metal and when it arrived at our office, nobody was disappointed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+