இதுவரை 90,000 புக்கிங்குகளை வாரிசுருட்டிய பென்ஸ் ஏ-கிளாஸ்

ஏ-கிளாஸ்
இதுவரை ஏ-கிளாஸ் காருக்கு இதுவரை 90,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக பென்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொகுசு கார் மார்க்கெட் வரலாற்றில் இது சாதனை பதிவாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் போட்டியாளர்களை சமாளிக்கும் விதமாக மூன்றாம் தலைமுறை ஏ-கிளாஸ் காரை பென்ஸ் அறிமுகம் செய்தது. ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த பிரிமியம் காரான ஏ-கிளாஸ் சொகுசு கார் மார்க்கெட்டில் பெரும் அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காருக்கு இதுவரை 90,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் கார் சந்தை மந்தமடைந்துள்ளது. இந்த நிலையிலும், ஏ-கிளாஸ் காருக்கு பெரிய அளவில் முன்பதிவு கிடைத்துள்ளது சாதனையாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜூலையில் இந்த மூன்றாம் தலைமுறை ஏ-கிளாஸ் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த பென்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பி-கிளாஸ் காரை பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த ஆண்டுக்கு பி-கிளாஸ் காருக்கு ஒதுக்கப்பட்ட புக்கிங் எண்ணிக்கை அனைத்தும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், பி-கிளாஸ் காரை விட குறைந்த விலையில், அதாவது, ரூ.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஏ-கிளாஸ் வர இருக்கிறது.

ஆன்ரோடு விலை ரூ.25 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் என்பதால், இந்தியாவிலும் இந்த கார் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 123 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் புனே அருகே இந்த கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது.

Most Read Articles
English summary
According to reports, the German auto giant Mercedes benz has bagged 90,000 bookings for the small car A-class. The car will be launched first in UK next month.
Story first published: Monday, November 19, 2012, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X