கார் விலையை உயர்த்துகிறது மெர்சிடிஸ் பென்ஸ்

வெளிநாட்டு கார் நிறுவனங்கள் எஞ்சின் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்கின்றன. இந்த நிலையில், ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இறக்குமதி பாகங்களுக்கு கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கிறது. இது கார் நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால், அவ்வப்போது கார் விலையை அனைத்து நிறுவனங்களும் உயர்த்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், முதலாவதாக மாருதி விலை உயர்வை அறிவித்தது. இதைத்தொடர்ந்து, முன்னணி கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து கார் விலை உயர்வை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சொகுசு கார் நிறுவனங்களில் பென்ஸ் முதலாவதாக விலை உயர்வை அறிவித்துள்ளது. ஜனவரி முதல் அனைத்து மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பதை பின்னர் அறிவிக்கப்படும் என்று பென்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








