ஆடி எஸ்4க்கு போட்டியாக அசத்தலான பென்ஸ் கார் அறிமுகம்!

ஆடி விற்பனைக்கு கொண்டு வந்துள்ள எஸ்4 காருக்கு போட்டியாக அதைவிட 10 லட்சம் குறைவான விலையில் தனது அசத்தலான புதிய சி-க்ளாஸ் காரை மெர்டிசிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த வாரம் ஆடி நிறுவனம் ரூ.45.31 லட்சம் விலையில் எஸ்-4 பெர்ஃபார்மென்ஸ் எடிசன் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக தனது ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் எடிசன் சி-க்ளாஸ் காரை பென்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

Benz C Class

இந்த காரில் 2143சிசி சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் ஏஎம்ஜியின் பிரத்யேக எஞ்சின் பொருத்தப்படவில்லை. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சி-க்ளாஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் இருக்கிறது.

ஏஎம்ஜி பாடி கிட், டிஸ்க் பிரேக், 17 இஞ்ச் ஏஎம்ஜி 5 ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் பேக் இன்டிரியர்ஸ், பேடில் ஷிப்ட், 3 ஸ்போக் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், நப்பா லெதர், கருப்பு வண்ண ஏஎம்ஜி முத்திரையுடன் தரை விரிப்புகள், அதிக துல்லியம் கொண்ட 4.5 டிஎப்டி கலர் டிஸ்ப்ளே ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

ஐதராபாத்தில் நடந்த அறிமுக விழாவில் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் ஹோனேக் கூறுகையில்," பென்ஸ் தயாரிப்புகளில் சி-க்ளாஸ் வெற்றிகரமான மாடலாக இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவில் மட்டும் 15,000 சி க்ளாஸ் கார்களை விற்றுள்ளோம். புதிய லிமிடேட் எடிசன் சி-க்ளாஸ் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சொகுசு அம்சங்களை வழங்குவதாக இருக்கும்," என்றார்.

100 சி-க்ளாஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் லிமிடேட் எடிசன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக பென்ஸ் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் ரூ.34.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சி-க்ளாஸ் கார் ஆடி எஸ்-4 காரைவிட ரூ.10 லட்சம் குறைவான விலையில் வந்து கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 15, 2012, 11:04 [IST]
English summary
Mercedes-Benz India today launched the new C-Class AMG Performance Edition with added AMG Sports Package. The C-Class 250 CDI Avant-garde has been hailed as the most aggressive vehicles in its class in terms of handling and driving dynamics.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+