தரத்தில் பெஸ்ட் கார் மாடல்கள் குறித்த சர்வே ரிப்போர்ட்
இந்த ஆண்டில் தரமான தயாரிப்புகளை தரும் கார் பிராண்டுகள் மற்றும் அதிக பிரச்னைகள் இல்லாத கார்கள் குறித்து ஜேடி பவர் நிறுவனம் ஆய்வு நடத்தியது. நாட்டின் 25 நகரங்களில் 8,688 கார் உரிமையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 16 கார் தயாரிப்பாளர்களின் 94 மாடல்கள் கணக்கில் கொள்ளப்பட்டு இந்த ஆண்டு மே மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் புதிய கார் வாங்கியவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆய்வில் பங்குகொண்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சிறந்த பிராண்டுகள் மற்றும் கார் மாடல்களை ஜேடி பவர் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
அதில், ஹோண்டாவும், டொயோட்டாவும் சிறந்த தயாரிப்புகளை தரும் பிராண்டுகளாக தேர்வாகியுள்ளது. இதேபோன்று, ஹூண்டாய் சான்ட்ரோ, ஹோண்டா பிரியோ உள்ளிட்ட கார் மாடல்கள் அதிக பிரச்னைகள் இல்லாத கார் மாடல்களாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரகத்திலும் தர மதிப்பீட்டில் சிறந்த மாடல்கள் குறித்து ஆய்வில் கூறப்பட்டிருக்கும் கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹேட்ச்பேக் செக்மென்ட்
ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் ஹூண்டாய் சான்ட்ரோ அதிக பிரச்னைகள் கொடுக்காத தரத்தில் சிறந்த காராக தேர்வாகியிருக்கிறது. மாருதி எஸ்டீலோ இரண்டாம் இடத்தையும், ஹூண்டாய் ஐ10 மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

பிரிமியம் ஹேட்ச்பேக்
இந்த ரகத்தில் ஹோண்டா பிரியோ முதலிடத்தை பிடித்துள்ளது. ஜாஸ் மற்றும் போலோ அடுத்த இடத்தை பிடித்துள்ளன.

என்ட்ரி லெவல் செடான்
என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் ஸ்விப்ட் டிசையருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தர மதிப்பீட்டு ஆய்வில் டொயோட்டா எட்டியோஸை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளது மஹிந்திரா வெரிட்டோ.

மிட் சைஸ் செடான்
மிட்சைஸ் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிதான் தர மதிப்பீட்டில் நம்பர்-1 ஆக தேர்வாகியிருக்கிறது. தற்போது விற்பனையில் பின் தங்கியிருக்கும் மாருதி எஸ்எக்ஸ்-4 குறைந்த பிரச்னைகள் கொண்ட கார் மாடல்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

யுட்டிலிட்டி ரகம்
இந்த பிரிவில் டொயோட்டா இன்னோவாவுக்குதான் முதலிடம். 100 இன்னோவா கார்களில் மொத்தம் 65 பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் யுட்டிலிட்டி ரகம்
இந்த பிரிவிலும் டொயோட்டாவின் தயாரிப்புக்குத்தான் முதலிடம். விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஃபார்ச்சூனர்தான் இந்த செக்மென்ட்டில் சிறந்த மாடலாக தேர்வாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








