ரூ.8.5 லட்சம் குறைவான விலையில் வரும் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

BMW 3 Series
ரூ.8.5 லட்சம் குறைவான விலையில் பேஸ் மாடல் 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

கடந்த ஜூலையில் மேம்படுத்தப்பட்ட 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்தது. பிஎம்டபிள்யூவின் என்ட்ரி லெவல் மாடலான இந்த கார் விற்பனையில் பிஎம்டபிள்யூவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளி்ககும் விதத்தில் குறைந்த வசதிகள் மற்றும் அம்சங்கள் கொண்ட பேஸ் மாடல் 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த உள்ளது. ஜூலையில் 328ஐ டாப் என்ட் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 320ஐ பேஸ் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

328ஐ வேரியன்ட்டை விட இந்த புதிய 320ஐ பெட்ரோல் மாடல் ரூ.8.5 லட்சம் வரை குறைவான விலையில் வருகிறது. விலை குறைப்புக்காக 8.8 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு பதில் சிறிய இன்போடெயிமென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

ரிவர்ஸ் கேமரா, டபுள் டின் ஆடியோ சிஸ்டம் இருக்காது. கண்ணாடி கூரை, 18 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக 16 இஞ்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம், ஐடிரைவ் தொழில்நுட்பம் இருக்கும். இந்த புதிய 3 சீரிஸ் காரில் 181 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1994 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 24, 2012, 11:30 [IST]
English summary
German car maker BMW to launch 320i base petrol variant of the 3-Series, which is expected to cost Rs 8.5 lakh lesser than top-of-the line 328i sport line model soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+