ரூ.28.9 லட்சத்தில் 3 சீரிஸ் காரை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

ரூ.28.9 லட்சத்தில் புதிய 3 சீரிஸ் செடான் காரை பிஎம்டபிள்யூவின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்றுமுன் மும்பையில் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மாதத்திலேயே 3சீரிஸ் காரின் டெலிவிரியும் துவங்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய 3 சீரிஸ் கார் நிச்சயம் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை கொடுக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய 3 சீரிஸ் கார் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில், டீசல் மாடலில் 4 வேரியண்ட்களும், பெட்ரோல் மாடலில் ஒரே ஒரு வேரியண்ட்டும் அடங்கும். இந்த புதிய கார் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பிளிங் செய்யப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

விலை விபரம்:

320டி : ரூ.28.90 லட்சம்

320டி ஸ்போர்ட்லைன்: ரூ.31.50 லட்சம்

320டி லக்ஸுரி லைன்: ரூ.31.50 லட்சம்

320டி லக்ஸுரி ப்ளஸ்: ரூ.36.90 லட்சும்

328ஐ ஸ்போர்ட் லைன்: ரூ.37.90 லட்சம்

(பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் காரின் படங்கள்)

More from DriveSpark

Article Published On: Friday, July 27, 2012, 13:14 [IST]
English summary
The new BMW 3-Series has unveiled in Mumbai today. The new 3-series is priced between Rs.28.90 lakhs and Rs.37.90 lakhs. The sixth generation BMW 3-series will be built as a CKD in Chennai and Deliveries are expected to begin this month itself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+