டெல்லி அருகே பிஎம்டபிள்யூவின் மிகப்பெரிய ஷோரூம்!
டெல்லி அருகே ஹரியான மாநிலம், பரீதாபாத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகப் பிரம்மாண்டமான கார் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.
கார் விற்பனை, சர்வீஸ் மையம், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து வழங்கும் வசதியுடன் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது.

1.30 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் ஷோரூமில் ஒரே நேரத்தில் 13 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும். இதேபோன்று, ஒரே நேரத்தில் 92 கார்களை சர்வீஸ் செய்யும் வசதியையும் கொண்டிருக்கிறது. இந்த ஷோரூமில் ஒரு நாளைக்கு 350 கார்களை சர்வீஸ் செய்ய முடியும்.
பிஎம்டபிள்யூவின் புதிய ஷோரூம் டிசைனை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூவின் எக்ஸ்-6 கிராஸ்ஓவர் கார் இந்த ஷோரூமில்தான் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








