ஸ்டீயரிங்கில் கோளாறு: எக்ஸ்-5 எஸ்யூவிகளை திரும்ப பெறும் பிஎம்டபிள்யூ

பவர் ஸ்டீயரிங்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக 2.5 லட்சம் எக்ஸ்-5 எஸ்யூவிகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது பிஎம்டபிள்யூ.

எக்ஸ்-5 எஸ்யூவியின் எஞ்சின் பெல்ட்டின் ஐடிலர் புல்லியில் பொருத்தப்பட்டிருக்கும் போல்ட் சரியாக பொருந்தாமல் கழலும் அபாயம் உள்ளது. இதனால், பவர் ஸ்டீயரிங்கில் சக்தி குறைபாடு ஏற்பட்டு காரை திருப்பும்போது ஸ்டீயரிங் சரியாக திரும்பாமல் விபத்துக்கு வழி வகுக்கும் நிலை இருப்பதாகவும் பிஎம்டபிள்யூ கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 2.5 லட்சம் எக்ஸ்-5 எஸ்யூவிகளை பிஎம்டபிள்யூ திரும்ப பெறுகிறது. 2009ம் ஆண்டு முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருக்கும் அனைத்து கார்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த அறிவிப்பையடுத்து அமெரிக்காவில் 29,800 கார்களும், கனடாவில் 5,000 கார்களும் திரும்ப பெறப்பட உள்ளன.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்-5 கார்களும் திரும்ப பெறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் எத்தனை கார்கள் திரும்ப பெறப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5

More from DriveSpark

Article Published On: Saturday, December 8, 2012, 14:54 [IST]
English summary
BMW will be recalling 250,000 X5 SUV's globally soon. All the affected BMW X5 have been built between 2009 and 2012. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+