2.5 ஆண்டுகளில் 3 லட்சம் எக்ஸ்1 கார்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ

அறிமுகம் செய்யப்பட்டு வெறும் இரண்டரை ஆண்டுகளில் உலக அளவில் 3 லட்சம் எக்ஸ்1 எஸ்யூவி கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது.

எக்ஸ் வரிசையில் பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வரும் எஸ்யூவி கார்களுக்கு உலக அளவில் பெரும் மரியாதையும், வரவேற்பும் இருக்கிறது.

BMW X1

குறிப்பாக, இந்த வரிசையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்1 என்ட்ரி லெவல் பிரிமியம் எஸ்யூவிக்கு உலக அளவில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

விலை, வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் என அனைத்து விதத்திலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 நிறைவான எஸ்யூவி கார் திகழ்கிறது.

இந்த நிலையில், உலக அளவில் 3 லட்சம் எக்ஸ்1 எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

ஆடி இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்த க்யூ3 எஸ்யூவிக்கு போட்டி கொடுக்கும் தகுதி வாய்ந்த ஒரே எஸ்யூவி எக்ஸ்1தான். எக்ஸ்1 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.22.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

க்ராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த இந்த என்ட்ரி லெவல் எஸ்யூவி ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. இருப்பினும், கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாற்றங்கள் செய்யப்படாத மாடலாக இருக்கிறது.

இந்த எக்ஸ்1 எஸ்யூவி தர சோதனைக்கான கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 30, 2012, 17:06 [IST]
English summary
The highest selling car in the BMW X series, the German carmker has sold 3 lakh X1 cars all over the globe in just 2.5 years. The X1 is a five seater crossover which is the carmaker's entry level car in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+