பிஎம்டபிள்யூ எக்ஸ்-6: ஸ்லைடரில் சிறப்பம்சங்கள் பார்வை
ஸ்போர்ட்ஸ் ஆக்ட்விட்டி கூபே என்ற புதிய ரகத்தில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்-6 கிராஸ்ஓவரை பிஎம்டபிள்யூ கடந்த வாரம் அறிமுகம் செய்தது. கவனத்தை ஈர்க்கும் டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என புதிய தலைமுறை சொகுசு காராக வந்திருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

வடிவமைப்பு
முப்பரிமான குரோம் கவருடன் கூடிய இரட்டை கிரில், புதிய அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகளுடன் முகப்பை கவர்ச்சியாக இருப்பதுடன் பிஎம்டபிள்யூவின் புதிய தலைமுறை கார் என்பதை உணர்த்திவிடுகிறது.முப்பரிமான குரோம் கவருடன் கூடிய இரட்டை கிரில், புதிய அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகளுடன் முகப்பை கவர்ச்சியாக இருப்பதுடன் பிஎம்டபிள்யூவின் புதிய தலைமுறை கார் என்பதை உணர்த்திவிடுகிறது.

கிராஸ்ஓவர்
மேம்படுத்தப்பட்ட இந்த புதிய கிராஸ்ஓவர் டிசைன் கொண்ட கார் புதிய ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டி வெகிக்கிள்(எஸ்ஏவி) என்ற புதிய ரகத்தில் வந்திருக்கிறது.

எஞ்சின்
235 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 407 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய எக்ஸ்-6 கிராஸ்ஓவர் வந்துள்ளது.

டாப் ஸ்பீட்
0-100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 240 கிமீ வேகம் வரை செல்லும்.

டிரான்ஸ்மிஷன்
இந்த புதிய கிராஸ்ஓவரில் 8 ஸ்பீட் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

கிரில்
பிஎம்டபிள்யூவின் அனைத்து கார்களையும் தற்போது அழகுப்படுத்தி வரும் சிறுநீரக வடிவ முன்பக்க கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கை வசதி
3 பேர் தாராளமாக அமரக்கூடிய லெதர் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில், பீயெஜ், கறுப்பு, ஆயிஸ்டர்-பிளாக், சாடில் பிரவுன்-பிளாக், வெர்மில்லியன் ரெட்-பிளாக் ஆகிய வண்ணக் கலவைகளை தேர்ந்தெடுக்கலாம்.

ஹெட்லைட்
இந்த ஸினான் ஹெட்லைட்டுகள் ஒளியை பீய்ச்சியடிப்பதில் தூர கட்டுப்பாடு மற்றும் சுத்தப்படுத்தும் வசதியை கொண்டிருக்கிறது. பனி விளக்குகளும் இடம் மாற்றம் கண்டிருக்கிறது. புதிய எல்இடி விளக்குகள் இரவுநேர பயணத்தில் அதிக பாதுகாப்பை வழங்கும்.

பகல் நேர ரன்னிங் விளக்குகள்
பகல்நேர ரன்னிங் விளக்குகளின் வளையத்தை படத்தில் பார்க்கிறீர்கள்.

ஐ-டிரைவ் தொழில்நுட்பம்
ஐ-டிரைவ் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் பவர் அனைத்து வீல்களுக்கும் மிகவும் சரிசமமாக செல்லும் என்பதால் ஸ்மூத்தான டிரைவிங்கை வழங்கும்.

பேடில் ஷிப்ட்
ஸ்டீயரிங் வீலில் வலது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பேடில் ஷிப்ட் மூலம் கியர்களை கூட்டவும், இடதுபுறம் கொடுக்கப்பட்டிருக்கும் பேடில் ஷிப்ட் மூலம் கியர்களை குறைக்கவும் முடியும்.

கன்ட்ரோல் ஸ்விட்சுகள்
ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
பொழுதுபோக்கு, செயற்கைகோள் வழிகாட்டி, ஐ-டிரைவ் தொழில்நுட்பத்தை இயக்குதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த டிஸ்ப்ளே மூலம் இயக்கலாம்.

எல்இடி டெயில் லைட்ஸ்
எக்ஸ்-6 காரில் எல்இடி டெயில் லைட் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சியை தருகிறது.

லெதர் பினிஷிங்
பின்புற டோர் பேனல்கள் நெவடா லெதர் அப்ஹோல்ஸ்டரி பினிஷிங் செய்யப்பட்டிருக்கிறது உட்புறத்தில் மிகவும் ரம்மியமான அனுபவத்தை தருகிறது.

இரட்டை சைலன்சர்
இந்த கிராஸ்ஓவரின் பின்புறத்தில் கீழே இருபுறங்களிலும் குரோம் பூச்சுடன் கூடி சைலன்சர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் இருக்கிறது.

கிளைமேட் கன்ட்ரோல் ஏசி
4 ஸோன் கன்ட்ரோலுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது.

அலாய் வீல்
டபுள் ஸ்போக் 19 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப்பது எக்ஸ்-6 கிராஸ்ஓவரின் கம்பீரத்தை கூட்டுகிறது.

கண்ணாடி கூரை
எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய கண்ணாடி கூரை.

பாதுகாப்பு வசதிகள்
அனைத்து பக்கங்களிலும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது எக்ஸ்-6


Click it and Unblock the Notifications








