பிஎம்டபிள்யூ கார்கள் கவிழவே கவிழாதா?
அதிவேகத்தில் காரில் செல்லும்போது குறுக்கே ஏதெனும் வாகனங்கள் அல்லது ஆடு மாடுகள் வந்துவிட்டால் பதட்டத்தில் சடன் பிரேக் அடிக்கிறோம். அதுபோன்று பிரேக் அடிக்கும் போது கார் கவிழ்ந்து விடுவதற்கோ அல்லது விபத்தில் சிக்குவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இதுபோன்று பிரேக் அடித்தால் கூட பிஎம்டபிள்யூ கார்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்குவதில்லை. ஏனெனில், அதன் தொழில்நுட்பம் அப்படி. நாம் கொடுக்கும் பணம் அந்த கார்களின் தொழில்நுட்பத்திற்குத்தான். பிஎம்டபிள்யூ கார்களில் குறிப்பிட்டு கூற வேண்டியது புவியீர்ப்பு விசைக்கு சாதகமான வடிவமைப்புதான்.

பொதுவாக கார்களில் வேகமாக செல்லும் போதோ அல்லது வளைவுகளில் திரும்பும்போதும் பேலன்ஸ் குறையும் என்பதால் வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டிச் செல்கிறோம். ஆனால், சில சமயம் திடீரென வளைவுகளில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது.
ஆனால், பிஎம்டபிள்யூ கார்களில் வேகமாக செல்லும்போது திடீரென வளைவு வந்துவிட்டாலோ அல்லது திடீரென பிரேக் பிடிக்க நேர்ந்தாலோ பெரும்பாலும் கவிழும் வாய்ப்பு குறைவு.பிற கார்களைவிட பிஎம்டபிள்யூ கார்கள் புவியீர்ப்பு விசைக்கு சாதகமாக காருக்குள்ளே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.
இதனாலேயே, பிஎம்டபிள்யூ கார்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க கார்களாக திகழ்கின்றன.


Click it and Unblock the Notifications








