பிரபல கார் நிறுவனங்களின் பிரம்மாண்ட தலைமையகங்கள்- ஒரு பார்வை

கார் தயாரிப்புக்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்களுது கார்களுக்கென பிரத்யேக டிசைனை கைவசம் வைத்துள்ளன. பார்த்தவுடனே இது இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்று கூறும் அளவுக்கு டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இதேபோன்று, தங்களது நிறுவனத்தின் செழிப்பையும், வடிவமைப்பு ஆற்றலையும் உலகுக்கு பரைசாற்றும் வகையில் பிரத்யேக டிசைன் கொண்ட கட்டிடங்களை தங்களது அலுவலகமாகவோ அல்லது இதர பயன்பாட்டு மையங்களாகவோ வைத்துள்ளன. இந்த தொகுப்பில் சில முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட கட்டிடங்களை சுவாரஸ்யமான தகவல்களுடன் காணலாம்.

பிஎம்டபிள்யூ தலைமையகம்

பிஎம்டபிள்யூ தலைமையகம்

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூவின் தலைமையகம் ஜெர்மனியிலுள்ள மூனிச் நகரில் அமைந்துள்ளது. நாணயங்களை அடுக்கியது போன்று காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 4 உருளைகளை ஒன்றாக நிற்க வைத்தது போன்று கட்டப்பட்டுள்ளது.

மெக்லேரன்

மெக்லேரன்

இங்கிலாந்திலுள்ள வோக்கிங் என்ற இடத்தில் மெக்லேரன் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. அரை வட்ட நிலா வடிவ கட்டிடமும், மீதமுள்ள பகுதி நீர் தேக்கம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அபுதாபி ரோல்ஸ்ராய்ஸ் தலைமையகம்

அபுதாபி ரோல்ஸ்ராய்ஸ் தலைமையகம்

"பெளர்ணமியன்று பால் வண்ண நிலவுக்கு பதில் தங்க கீற்றுகளுடன் கருப்பு நிலா அடிவானில் இருந்து கிளம்பும்போது எப்படியிருக்கும்," என்ற கற்பனையை தூண்டுகிறது இரவு நேர விளக்கொளியில் மின்னும் ரோல்ஸ்ராய்ஸ் அபுதாபி தலைமையக கட்டிடம்..

ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகம்

ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகம்

அமெரிக்காவின் டெட்ராய்டில் நதிக்கரையோரம் வானுயர்ந்து நிற்கிறது ஜெனரல் மோட்டார்ஸ் சர்வதேச தலைமையகம். 7 உயரமான கட்டிடங்கள் இணைந்து ரென்சென் மையம் என்று குறிப்பிடப்படும் இந்த அடுக்குமாடி வளாகத்தில் முதன்மை கட்டிடத்தை கடந்த 1996ல் ஜெனரல் மோட்டார்ஸ் வாங்கியது.

அபுதாபி ஃபெராரி வேர்ல்டு

அபுதாபி ஃபெராரி வேர்ல்டு

உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2012, 15:40 [IST]
English summary
Have you ever wondered about the top car makers headquarters? Browse through some of the most powerful car manufacturers headquarters. Do let us know which one of these car makers headquarters caught your attention.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+