ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் கார்: சீனாவில் அறிமுகம்

ரிமோட் கார்
குழந்தைகளுக்கான ரிமோட் கன்ட்ரோல் கார் போன்றே, ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இயங்கும் செடான் காரை சீனாவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தானியங்கி கார்களை வடிவமைப்பதற்கு தற்போது ஆட்டோமொபைல் உலகில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் வசதிகொண்ட காரை சீனாவை சேர்ந்த பிஒய்டி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சூ ரூய் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் காரை வெளியில் இருந்தபடியே ரிமோட் மூலம் இயக்கலாம். ஆனால், ரிமோட் மூலம் இயங்கும்போது இந்த கார் 2 கிமீ வேகத்தில் மட்டுமே நகரும். 10 மீட்டர் தூரத்திற்குள் ரிமோட் மூலம் இயக்கும் வசதிகொண்ட எந்தபக்கம் வேண்டுமானாலும் திருப்பும் வசதியையும் கொண்டிருக்கிறது.

மற்றபடி, டிரைவர் இயக்கும்போது சாதாரண கார்களை போல நல்ல பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராகவே இருக்கும். 109 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார்வெறும் 8.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும். ரிமோட் மூலம் இந்த காரின் ஏசியை வெளியிலிருந்தபடியே இயக்க முடியும்.

இதன்மூலம், காருக்குள் அமர்வதற்கு முன்பே ஏசியை ஆன் செய்துவிடவும், நிறுத்தவும் முடியும். இந்த ரிமோட் வசதி குறித்து பிஒய்டி நிறுவனம் கூறுகையில், காருக்குள் அமர்ந்து பார்க்கிங் செய்வதைவிட ரிமோட் மூலம் பார்க்கிங் செய்வது எளிதானதும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், ரிமோட் கன்ட்ரோல் பவர் விண்டோஸ், 5.1 சேனல் 10 ஸ்பீக்கர் சர்ரவுண்ட் சிஸ்டம், கார் கேமரா, வாய்ஸ் ரிமைன்டர் உள்ளிட்ட அம்சங்களை இந்த புதிய கார் கொண்டிருக்கிறது.

5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த ரிமோட் கன்ட்ரோல் கார் இந்திய மதிப்பில் ரூ.5.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 27, 2012, 12:20 [IST]
English summary
Chinese automaker BYD has devolved a car that can be controlled through remote control at distances of up to 10 m (33 ft). The Su Rui has a top speed of just 2 kmph when it controlled through remote control.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+