புதிய மாடல்களுக்கும் தள்ளுபடி தரும் கார் நிறுவனங்கள்!

ஆண்டு கடைசியில் கார் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்குவது சகஜம். அதேவேளை, புதிதாக மார்க்கெட்டுக்கு வரும் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது இல்லை. ஆனால், விற்பனை மந்தமாக இருப்பதால் தற்போது புதிய கார்களுக்கும் தள்ளுபடி சலுகைககள் வழங்கப்படுகிறது.
புதிய ஆல்ட்டோ 800 காருக்கு ஆன்ரோடு விலையில் ரூ.16,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று, நிசான் எவாலியாவுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதே வரிசையில் மார்க்கெட்டுக்கு புதிதாக வந்த செவர்லே செயில் காருக்கு ரூ.15,000 சலுகைகள் வழங்கப்படுகிறது. இதேபோன்று, பிற நிறுவனங்களும் தங்களது புதிய கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








