பீட்டை மிலிட்டரி ஸ்டைலில் மாற்றிய அமெரிக்க நிறுவனம்

மிலிட்டரி ஸ்டைலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட பீட் காரை 2012 செமா ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைத்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைசேஷன் நிறுவனமான எனிமி டூ ஃபேஷன். ராணுவத்தில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தரமானதாகவும் இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த காரின் பெயின்ட்டிங் உள்ளிட்டவை செவர்லே பீட்டை மிலிட்டரி வாகனமாகவே மாற்றியிருக்கிறது. ஸ்லைடரில் மிலிட்டரி ஸ்டைல் பீட்டை கண்டு ரசியுங்கள்.

 பெயின்ட்

பெயின்ட்

பீட் ராணுவ வாகனமாக மாறியதற்கு பெயின்ட்டிங்தான் முக்கிய காரணம்.. ராணுவ வாகனங்களில் பயன்படுத்தும் வெளிர் பச்சை, கரும்பச்சை நிறங்களில் பெயின்ட்டிங் செய்யப்பட்ட பீட்.

இன்டிரியர்

இன்டிரியர்

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இன்டிரியர்.

ரிகாரோ பக்கெட் சீட்

ரிகாரோ பக்கெட் சீட்

சொகுசான ரிகாரோ பக்கெட் சீட் பொருத்தப்பட்டிருக்கிறது.

கஸ்டமைசேஷன்

கஸ்டமைசேஷன்

ரேஸிங் கார் வடிவமைப்பு மற்றும் விண்டேஜ் கார் புதுப்பிப்பதில் புகழ்பெற்ற பில் ரைனி என்ற நிறுவனமும் இந்த கார் கஸ்டமைசேஷன் பணிகளில் உடன் பணியாற்றி இருக்கிறது.

ஸ்பெஷல் ஆக்சஸெரீஸ்கள்

ஸ்பெஷல் ஆக்சஸெரீஸ்கள்

பிஸ்போக் பாடி கிட், கிக்கர் ஆடியோ சிஸ்டம், எல்இடி லைட்ஸ், 15 இஞ்ச் அலாய் வீல், ஃபால்கன் டயர் ஆகியவை மிலிட்டரி பீட்டின் அந்தஸ்தை உயர்த்துகிறது.

மிலிட்டரி பீட் பெர்ஃபார்மென்ஸ்

மிலிட்டரி பீட் பெர்ஃபார்மென்ஸ்

அதிக பெர்ஃபார்மென்ஸ் வேண்டி வினோம் நைட்ரஸ் சிஸ்டம், இன்ஜென் கோல்ட் ஏர் இன்டேக்ஸ், சூப்பர்டிரேப் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவ தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த பீட்.

ஸ்பெஷல் எடிசன் டீசர்ட்ஸ்

ஸ்பெஷல் எடிசன் டீசர்ட்ஸ்

இந்த காருடன் லிமிட்டேட் எடிசன் டீசர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஓவியர் நாதன் கேப்ரியா வடிவமைத்த இந்த டீசர்ட்டுகள் 30 டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
A US based company - Enemy To Fashion has taken the Chevrolet Spark (sold as the beat in India) and modified it to look like an army vehicle. It has used forest camouflage paint for the exterior and vintage army material for the interior. This specially designed car gets several features. Have a look at the images below to know more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X