கூடுதல் பவருடன் வந்துவிட்டது புதிய செவர்லே க்ரூஸ்!

புதிய க்ரூஸில் 2.0 லிட்டர் விசிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டுள்ளதால் முன்பைவிட 16 பிஎச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும்.
இதன்மூலம் தற்போது அதிகபட்சமாக 166 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை க்ரூஸ் பெற்றிருக்கிறது. மேலும், ஹைட்ராலிக் க்ளட்ச் சிஸ்டத்துடன் புதிய 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.
வடிவமைப்பில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை. க்ரூஸின் உட்புறத்திலும் மாற்றங்கள் தென்படவில்லை.
6 வே அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட இருக்கை, பவர் விண்டோ உள்ளி்ட்ட ஸ்டாண்டர்டு அம்சங்களுடன் வந்துள்ளது. சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் கொண்ட ஆடியோ சிஸ்டமும் க்ரூஸ் பெற்றுள்ளது.
விலை விபரம்:
க்ரூஸ் எல்டி : ரூ.13.85 லட்சம்
க்ரூஸ் எல்டிஇசட் : ரூ.17.77 லட்சம்
க்ரூஸ் எல்டிஇசட் ஏடி : ரூ.15.67 லட்சம்


Click it and Unblock the Notifications








