புதிய செவர்லே ஸ்பார்க் அறிமுகம்: படங்களுடன் விபரங்கள்

ரூ.3.16 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்பார்க் காரை செவர்லே அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் கார்களால் செவர்லே ஸ்பார்க் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வடிவமைப்பில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் ஸ்பார்க்கை மேம்படுத்தி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது செவர்லே. பெட்ரோல் மற்றும் எல்பிஜியில் 5 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஸ்பார்க்கின் இதர விபரங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ஃபிரேம்

புதிய ஃபிரேம்

முன்பைவிட 51 சதவீதம் கூடுதல் உறுதியுடன் கூடிய புதிய ஃபிரேமுடன் கட்டுறுதி மிக்கதாக புதிய ஸ்பார்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பார்க் 6 வண்ணங்களில் கிடைக்கும்.

முகப்பு

முகப்பு

கிளியர் கிளாஸ் ஹெட்லைட், புதிய முன்பக்க கிரில் ஆகியவை புதிய ஸ்பார்க்கின் கவர்ச்சியை கூட்டுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 18.0 கிமீ மைலேஜ் தரும் என சான்றளிக்கிறது. மணிக்கு அதிகபட்சம் 156 கிமீ வேகம் வரை செல்லும்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

கிளியர் கிளாஸ் ஹெட்லைட்டுகள் அதிக பிரகாசத்தையும் வழங்குவதோடு பார்வைக்கும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கிறது.

ரூஃப் ரெயில்

ரூஃப் ரெயில்

சில்வர் பினிஷிங் கொண்ட புதிய ரூஃப் ரெயில்கள் கூடுதல் கவர்ச்சி தருகிறது. எஞ்சினை பொறுத்தவரையில் மாற்றமில்லை. 63 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டேஞ்சர் லைட்

டேஞ்சர் லைட்

குரோம் பினிஷிங்குடன் கூடுதல் பொலிவு பெற்றுள்ள டேஞ்சர் லைட்டுகள் பின்புற வாகன ஓட்டிகளுக்கு துல்லியமாக எச்சரிக்கும் வகையில் இருக்கும்.

இரட்டை வண்ண இன்டிரியர்

இரட்டை வண்ண இன்டிரியர்

இரட்டை வண்ண கலவையுடன் கூடிய இன்டிரியர் புதிய ஸ்பார்க் உட்புறத்தின் அந்தஸ்தை கூட்டுவதோடு கண்களுக்கும் இதமளிக்கிறது.

சென்ட்ரல் கன்சோல்

சென்ட்ரல் கன்சோல்

குரோம் பினிஷிங்குடன் கூடிய சென்ட்ரல் கன்சோலில் 2 டின் மியூசிக் சிஸ்டம், ஏசி வென்ட்டுகளுடன் உச்சியில் ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

சிறகுகளை விரித்தது போன்ற வடிவமைப்புடன் கவர்ச்சியான அம்சங்களுடன் புதிய ஸ்பீடோமீட்டர் பொருத்தியிருக்கிறது செவர்லே. ரூ.3.16 லட்சம் ஆரம்ப விலையில் பெட்ரோல் மாடலும், ரூ.3.71 லட்சம் ஆரம்ப விலையில் எல்பிஜி மாடலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 25, 2012, 16:28 [IST]
English summary
Chevrolet has launched the new facelift Spark hatchback. The car is priced at Rs 3.16 lakh ex-showroom Delhi for the base model. The new Spark is now available in five variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+