அடுத்த ஆண்டு புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் செவர்லே
அடுத்த ஆண்டு புத்தம் புதிய டிராக்ஸ் காம்பெக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த செவர்லே திட்டமிட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் காம்பெக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெனோ டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்து புதிய மாடல்கள் அந்த மார்க்கெட்டில் குவிய இருக்கிறது. செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது புதிய டிராக்ஸ் மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது.

ஓபல் மொக்கா பிளாட்பாரம்
ஓபல் மொக்கா எஸ்யூவி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி 4.2 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 1.77மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

எஞ்சின்
140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 130 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.7 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வர இருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

இருக்கை வசதி
5 பேர் தாராளமாக பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும். இதுதவிர, பொருட்கள் வைப்பதற்கான சிறந்த பூட் ரூமையும் கொண்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்
ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், எலக்ட்ராக்னிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும்.

வெற்றி பெறுமா?
ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் வர இருக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவியின் டாப் என்ட் ஆட்டோமேட்டிக் மாடலில் லெதர் இருக்கைகள், ஸினான் ஹெட்லைட்டுகள், கண்ணாடி கூரை போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த டாப் என்ட் மாடல் ரூ.12 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனவே, போட்டியாளர்களின் நெருக்கடிகளை எளிதாக சமாளித்து இந்த எஸ்யூவி எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








