அமிதாப்பச்சனுக்கு டிரிக்கி எலக்ட்ரிக் சைக்கிள் பரிசு வழங்கிய குரோர்பதி போட்டியாளர்

அமிதாப் பச்சன் டிரிக்கி சைக்கிள்
கான் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போட்டியாளர் ஒருவர் அந்த நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப்பச்சனுக்கு டிரிக்கி எனப்படும் மூன்று சக்கர எலக்ட்ரிக் சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் முதல் லம்போர்கினி கார் வரை நிரம்பியுள்ள நடிகர் அமிதாப்பச்சன் கேரேஜில் இந்த புதிய டிரிக்கி எலக்ட்ரிக் சைக்கிளும் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறுகையில்,"

"குரோர்பதி நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இப்போதைக்கு என் மனதிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் போட்டியாளர் ஒருவர் வழங்கிய இந்த டிரிக்கி சைக்கிள்தான்.

எனக்கு எதற்காக இந்த சைக்கிளை அவர் தேர்ந்தெடுத்து வழங்கினார் என தெரியவில்லை. ஆனால், மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. டிரிக்கி என இதற்கு சரியாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

குரோர்பதி படபிடிப்பு தளத்திற்குள் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை சிறிது தூரம் ஓட்டினேன். மிக அருமையாக இருக்கிறது. ஆனால், ஒரு விதத்தில் எனக்கு இது அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் எனது பேரன் அகஸ்தியா எடுத்து ஓட்டி விழுந்துவிடுவானோ என அச்சமாக இருக்கிறது," என்று கூறினார்.

நின்றுகொண்டே கைப்பிடிகளை பிடித்து செல்லும் வகையிலான டிரிக்கி சைக்கிள்கள் மூன்று சக்கரங்களை கொண்டதாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் சிறிய மோட்டார் துணையுடன் மிதமான வேகத்தில் செல்லும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 1, 2012, 16:07 [IST]
English summary
Bollywood Ever greean star Amitabh Bachchan has gifted a trikke cycle by Kaan banega crorepathi contestant recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+