டிசி கைவண்ணத்தில் உருவான மஹிந்திரா எக்ஸ்யூவி!
கார் கஸ்டமைசேஷனில் புகழ்பெற்ற பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீப் சாப்ரியாவின் டிசி நிறுவனம் டொயோட்டா இன்னோவா காரில்தான் அதிகம் கஸ்டமைசேஷன் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவியிலும் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறது டிசி நிறுவனம்.
மிரட்டலான தோற்றம் கொண்ட எக்ஸ்யூவிக்கு டிசி கொடுத்துள்ள கஸ்டமைஸ் பணிகள் மனதை மெஸ்மரைஸ் செய்கிறது. அடிக்கடி நீண்ட பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் ஏராளமான சொகுசு வசதிகளுடன் மாற்றப்பட்டிருக்கும் இந்த எக்ஸ்யூவியின் உட்புறத்தை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

முகப்பில் மாற்றம்
முகப்பில் கிரில், ஏர் டேம் வடிவமைப்பு மாற்றப்படுகிறது.

முன்வரிசை
முன்வரிசை இருக்கைகள் மிக மிக சொகுசான லெதர் இருக்கைகளை கொண்டிருக்கிறது. டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகிய அனைத்தையும் டிசி இழைத்துள்ளதை பார்த்தாலே தெரியும்.

வசதிகள்
முன்இருக்கையின் பின்புறம் 10.4 இஞ்ச் எல்சிடி டிவி திரைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. லேப்டாப் மற்றும் உணவு சாப்பிடுவதற்கு ஏதுவாக மடக்கி விரிக்கும் வசதி கொண்ட 2 சிறிய டேபிள்களும் உண்டு. மேற்புறம் விமானத்தில் உள்ளது போன்று எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இருக்கைகள்
2வது, 3வது வரிசை இருக்கைகள் கழற்றப்பட்டு, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட இரண்டு கிங் சைஸ் லெதர் இருக்கைள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளை 150 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள முடியும். டிவி திரைகள் மற்றும் டிவி பிளேயரை இயக்குவதற்கு இருக்கைகளின் கைப்பிடியிலலேயே பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பூட் ரூம்
இந்த காரில் பொருட்களை வைப்பதற்கு பின்புறம் இடவசதி இருக்கிறது. எனவே, நீண்ட தூரம் செல்லும் போது பொருட்களை எடுத்துச் செல்வதில் பிரச்னை இருக்காது. மொத்தத்தில் 4 பேர் செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








