பிரேசிலில் ஈக்கோஸ்போர்ட்டை ஓரம் கட்டிய டஸ்ட்டர்!
இந்திய காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நேரடி போட்டியாளர் யாரும் இல்லாத நிலையில், ரெனோ டஸ்ட்டர் தற்போது தனிக்காட்டு ராஜாவாக விற்பனையில் பின்னி எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரெனோ டஸ்ட்டர் அடுத்த ஆண்டு பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை இருக்கிறது. அடுத்த மாதம் முதலாவதாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகமாக இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட் வந்தால் ரெனோ டஸ்ட்டரின் விற்பனையில் சிறிது சரிவு காணும் என்று ஆட்டோமொபைல் துறை ஆருடங்கள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், பிரேசில் மார்க்கெட்டில் ஏற்கனவே டஸ்ட்டரும், ஈக்கோஸ்போர்ட்டும் அறிமுகமாகிவிட்டன. விற்பனையில் இரு கார்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. நவம்பர் விற்பனை நிலவரப்படி பிரேசிலில் ஈக்கோஸ்போர்ட்டை ரெனோ டஸ்ட்டர்தான் அங்கு முன்னிலை வகிக்கிறது.
கடந்த மாதம் பிரேசிலில் 3,633 ஈக்கோஸ்போர்ட் கார்களும், 4,685 டஸ்ட்டர் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. அதாவது, விற்பனையில் ஈக்கோஸ்போர்ட்டைவிட 29 விழுக்காடு கூடுதல் விற்பனையை டஸ்ட்டர் பெற்றுள்ளது.
பிரேசில் மார்க்கெட்டில் ரெனோ டஸ்ட்டரை விட ஈக்கோஸ்போர்ட் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இந்திய மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட் 4 மீட்டருக்கும் குறைவாக சுருக்கப்படிருப்பதால் அரசின் வரிச் சலுகையை ஈக்கோஸ்போர்ட் பெறும். எனவே, டஸ்ட்டரை விட ஈக்கோஸ்போர்ட் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
எனவே, இந்திய மார்க்கெட்டில் இந்த நிலை தலைகீழாக மாறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் டஸ்ட்டரை வீழ்த்தி ஈக்கோஸ்போர்ட் முன்னிலை பெறுமா, அல்லது டஸ்ட்டர் தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுமா? - என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








