ஃபேஸ்புக்கில் அசத்தும் ஃபெராரி: 10 மில்லியன் ரசிகர்களை பெற்றது

இதற்கு ஃபெராரியின் ஃபேஸ்புக் பக்கம் சான்றாகியுள்ளது. ஆம், ஃபேஸ்புக்கில் இதுவரை 10 மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறது ஃபெராரி. கடந்த 2009ம் ஆண்டுதான் ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கியது ஃபெராரி. 3 ஆண்டுகளில் எந்தவொரு கார் நிறுவனத்துக்கும் இல்லாத அளவாக இந்த இமாலய ரசிக பட்டாளத்தை ஃபேஸ்புக்கில் பெற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் மட்டும் 4 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளது. மேலும், ஃபேஸ்புக்கில் ஃபெராரியை தொடர்பவர்களில் 55 சதவீதத்தினர் 24 வயதிற்கும் குறைவானர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் 10 மில்லியன் ரசிகர்களை பெற்றதை கொண்டாடும் விதமாக, தனது நிறுவனத்தின் தலைவர் லூகா டி மான்டிஸிமோலோவின் உருவத்துடன் கூடிய சிறிய கார்ட்டூனை ஃபெராரி வெளியிட்டிருக்கிறது.
அதில்,ஃபேஸ்புக் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. ஃபெராரி இந்தியா நிறுவனம் ஃபேஸ்புக்கில் ஏற்கனவே 1 மில்லியன் ரசிகர்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications