ரூ.7.36 லட்சத்தில் புதிய புன்ட்டோ ஸ்போர்ட்: ஃபியட் அறிமுகம்
ரூ.7.36 லட்சம் ஆரம்ப விலையில் புன்ட்டோவின் புதிய வகை காரை ஃபியட் அறிமுகம் செய்துள்ளது. புதிய கிராண்ட் புன்ட்டோ ஸ்போர்ட் அழகில் அசத்துகிறது.
புனேயில் திறக்கப்பட்டுள்ள ஃபியட் கஃபேயில் புதிய கிராண்ட் புன்ட்டோ ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய புன்ட்டோ நிச்சயம் கவரும்.

ஏராளமான புதிய வசதிகள் மற்றும் கையாளுமையில் சிறந்த காராக புதிய கிராண்ட் புன்ட்டோ ஸ்போர்ட் இருக்கும் என்று ஃபியட் தெரிவித்துள்ளது. புதிய புன்ட்டோவில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், லெதருடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் ஆகிய வசதிகளுடன், ஏபிஎஸ், இபிடி, டூயல் முன்பக்க காற்றுப் பைகள் என குறைவில்லா அம்சங்களுடன் வந்துள்ளது புதிய புன்ட்டோ ஸ்போர்ட். சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் புன்ட்டோ ஸ்போர்ட் கிடைக்கும்.
ஃபியட் நிறுவனம் கிராண்ட் புன்ட்டோ மற்றும் லீனியா ஆகிய இரண்டு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், புன்ட்டோவின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புன்ட்டோ நிச்சயம் விறபனையில் புதுத் தெம்பை ஊட்டும் என ஃபியட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








