அதேவிலை, கூடுதல் அம்சங்களுடன் வந்த ஸ்பெஷல் புன்ட்டோ, லீனியா
புதிய அம்சங்கள் மற்றும் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் அப்சொலியூட் எடிசன் என்ற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களை ஃபியட் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒத்த ரூபாய் கூட கூடுதல் இல்லாமல் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் வந்துள்ளன.
ஏராளமான ஆக்சஸெரீஸ்களுடன் வந்திருக்கும் புன்ட்டோ, லீனியா கார்களுக்கு ஃபியட் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த இரண்டு கார்களின் கூடுதல் அம்சங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருக்கிறது. இதுபற்றிய விபரத் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

எவ்வளவு சலுகை கிடைக்கும்?
புன்ட்டோ காருக்கு ரூ.67,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களையும், லீனியா காருக்கு ரூ.78,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களையும் இலவசமாக வழங்குகிறது ஃபியட்.

லீனியாவுக்கு கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
டச் ஸ்கிரீன் ஜிபிஎஸ் நேவிகேட்டருடன் கூடிய 3ஜி டேப்லெட், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், அப்சொலியூட் பேட்ஜ், கேபின் மேட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் அம்சங்களுடன் வந்துள்ளது ஸ்பெஷல் எடிசன் லீனியா.

புன்ட்டோவுக்கு கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
டச் ஸ்கிரீன் ஜிபிஎஸ் நேவிகேட்டருடன் கூடிய 3 ஜி டேப்லெட், அப்சொலியூட் ஸ்பெஷல் எடிசன் பிராண்டு பேட்ஜ், ஸ்ப்ளாஷ் கார்டு உள்ளிட்ட இன்னும் பிற ஆக்சஸெரீ்ஸ்கள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








