ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின்... ஓர் ஆச்சர்ய செய்தி!

Ecoboost Engine
இந்த ஆண்டுக்கான சிறந்த எஞ்சின் என்ற விருதை பெற்ற ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பற்றிய ஆச்சரியமான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏ-4 சைஸ் பேப்பரின் பரப்பளவை மட்டுமே கொண்ட இந்த எஞ்சினை சூட்கேஸில் வைத்து எடுத்து சென்று விடமுடியுமாம்.

1000 சிசி திறன் கொண்ட ஈக்கோபூஸ்ட் என்ற புதிய பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு வடிவமைத்துள்ளது. 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் அம்சங்களை கொண்டது.

123 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் முதலாவதாக ஃபியஸ்ட்டா செடான் காரில் பொருத்தப்பட்டு விரைவில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியிலும் இந்த எஞ்சின்தான் உயிர் கொடுக்க உள்ளது.

இந்த நிலையில், ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த எஞ்சினை சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்டிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஒரு சூட்கேஸில் வைத்து கூரியர் வழியாக ஃபோர்டு அனுப்பியிருக்கிறது. விமான நிலையத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் சந்தேகப்பட்டு சூட்கேஸை பிரித்து பார்த்தபோது அதில் அடக்கமாக எஞ்சின் இருப்பதை கண்டு இதுதொடர்பாக விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, அது ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஈக்கோபூஸ்ட் என்பது தெரியவந்திருக்கிறது. இதுபற்றி தெளிவுபெற்ற பின் அந்த சூட்கேஸை அனுப்பிய அதிகாரிகள், சூட்கேஸில் வைக்கும் அளவுக்கு இருந்த கார் எஞ்சினை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கின்றனர். அலுமினிய கேஸிங் பதிலாக இந்த எஞ்சின் வார்ப்பிரும்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அலுமினியத்தை விட அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவும் அதேவேளையில் இலகு எடை கொண்டதாகவும் இருக்கிறது.

மேலும், மிகச்சிறிய டர்போசார்ஜர்கள் இந்த எஞ்சினில் பொருத்தப்பட்டிருக்கிறது. நிமிடத்திற்கு 2,48,600 சுழல் திறன் கொண்ட(ஆர்பிஎம்) இந்த டர்போசார்ஜர்கள்தான் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை உருவாக்கி தருகிறதாம்.

source: Autoblog

More from DriveSpark

Article Published On: Monday, November 19, 2012, 10:49 [IST]
English summary
American car maker Ford has actually transported the EcoBoost engine from Detroit to Los Angeles in such a carry-on suitcase much to the surprise of the airport security officials.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+