ஏப்ரலில் ஈக்கோஸ்போர்ட்டை அறிமுகப்படுத்த ஃபோர்டு முடிவு
அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்ய ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈக்கோஸ்போர்ட் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனையிலும் இந்த புதிய எஸ்யூவி மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் உற்பத்திக்கென பிரத்யேக உற்பத்தி பிரிவை ஃபோர்டு அமைத்துள்ளது. இந்த புதிய உற்பத்தி பிரிவில் முறைப்படி கார் உற்பத்தியை துவங்குவதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, ஏப்ரலில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வரும் என ஃபோர்டு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








