7 சீட்டர் ஈக்கோஸ்போர்ட்டை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டம்

Ecosport
7 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட ஈக்கோஸ்போர்ட் காரையும் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகப்படுத்த உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த மாடல் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட ஈக்கோஸ்போர்ட் அடுத்த மாதம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக உள்ளது. வரிச்சலுகை பெறும் விதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை 4 மீட்டருக்கும் குறைவாக சுருக்கியிருக்கிறது ஃபோர்டு.

ஆனாலும், ஈக்கோஸ்போர்ட்டின் நேரடி போட்டியாளர்களான ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா குவான்ட்டோ உள்ளிட்ட கார்கள் 7 சீட்டர் மாடல்களில் கிடைப்பதால் ஈக்கோஸ்போர்ட்டுக்கு நெருக்கடி இருக்கிறது. இதனை தவிர்க்க ஈக்கோஸ்போர்ட்டின் 7 சீட்டர் மாடலையும் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

இந்த 7 சீட்டர் மாடல் 4.34 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்பதோடு, வரிச்சலுகை கிடைக்காது என்பதால் 5 சீட்டர் மாடலைவிட விலையிலும் அதிமாக இருக்கும். ஆனால், இதுகுறித்து ஃபோர்டு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, December 14, 2012, 14:39 [IST]
English summary
American car maker Ford is considering to launch 7 seater Ecosport model in Indian market to take on Competitors.
மேலும்... #ford #ecosport #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+