'நடுராத்திரி' கார் விற்பனை: ஃபோர்டு வழங்கும் அதிரடி சலுகைகள்

நாளை ஃபிகோ கார் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக ரூ.25,500 வழங்கப்படுகிறது. இதனால், ஃபிகோ காரை ரூ.3.85 லட்சம் ஆரம்ப விலையிலேயே வாங்கலாம்.
கிளாசிக் செடான் காருக்கு 34,500 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், கிளாசிக் காரை ரூ.5.58 லட்சம் ஆரம்ப விலையில் வாங்க முடியும். இதுதவிர, குளோபல் ஃபியஸ்ட்டா காருக்கு ரூ.72,000 தள்ளுபடி கிடைக்கும். மொத்தமாக ரூ.81,000 வரை சேமிக்க முடியும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
என்டெவர் எஸ்யூவிக்கும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இவைதவிர, ரூ.3.5 கோடிக்கு சிறப்பு பரிசுகளை ஃபோர்டு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைக்ககாக நாடு முழுவதும் உள்ள ஃபோர்டு ஷோரூம்கள் நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள ஃபோர்டு டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








