அஸ்டன் மார்ட்டினின் புதிய கார்: சுற்றி சுற்றி பார்க்கலாம் வாங்க!

By Saravana

அஸ்டன் மார்ட்டின் கார்கள் என்றாலே ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான் நினைவுக்கு வரும். ஜேம்ஸ்பாண்ட் கைகளின் கட்டளைகளை லாவகமாக செயலாற்றும் அஸ்டன் மார்ட்டின் கார்களின் சாமுத்ரிகா லட்சணம் கொண்ட அழகு, வீரம் செறிந்த எஞ்சின் ஆகியவை பார்த்து அசராதவர்கள் இருக்க முடியாது.

கோடீஸ்வரர்களின் கனவு கார்களின் பிராண்டாக திகழும் அஸ்டன் மார்ட்டின் லேட்டஸ்ட் மாடல் வேங்க்யுஷ். அஸ்டன் மார்ட்டினின் ஒன் 77 காரின் அம்சங்களில் சிலதுடன் பல புதுமைகளையும் சேர்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது வேங்க்யுஷ். அடுத்த தலைமுறை அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய வேங்க்யுஷ் கண்களை விட்டு அகல மறுக்கும் வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

வேங்க்யுஷின் தரிசனம்

வேங்க்யுஷின் தரிசனம்

புதிய வேங்க்யுஷ் காரின் முதல் தரிசனத்தின்போது வடிவமைப்பை கண்டு வியந்த பார்வையாளர்கள். வார்விக்ஷையர், கேய்டனில் உள்ள அஸ்டன் மார்ட்டின் தயாரிப்பு மையத்தில் கைவினைஞர்களின் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வேங்க்யுஷ் தயாராகிறது

 பின்புற வடிவமைப்பு

பின்புற வடிவமைப்பு

எல்இடி டேஞ்சர் விளக்குகள், இரட்டை குழல் சைலன்சர் என அசத்தும் வேங்க்யுஷ்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

அசத்தலான டிசைன் கொண்ட இந்த புதிய கார் 2+2 சீட்டர் மற்றும் 2+0 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.

அமைதிப் புயல்

அமைதிப் புயல்

வி8 வேண்டேஜ், டிபி9, வி12 வேண்டேஜ் மற்றும் ரேபிடே வரிசையில் வந்துள்ள வேங்க்யுஷின் பிரத்யேக ஷாட்

எஞ்சின்

எஞ்சின்

565 பிஎச்பி ஆற்றல் வாய்ந்த வி12 எஞ்சினுடன் சாலையில் சீறிப்பாய்ந்து செல்லும் வேங்க்யுஷ் கார்.

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டு தோற்றம்

ஸ்போர்ட்ஸ் கார் என மார்தட்டும் வேங்க்யுஷின் பக்கவாட்டு தோற்றம்

முன்புற தோற்றம்

முன்புற தோற்றம்

பகல்நேர ரன்னிங் விளக்குகள், பேனட்டுடன் இழைந்தோடும் வடிவமைப்புடன் ஹெட்லைட், அலாய் வீல்களுடன் காட்சி தரும் அஸ்டன் மார்ட்டின் வேங்க்யுஷின் பிரத்யேக ஷாட்

இந்த புதிய காரில் 565 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் வெறும் 4.1 வினாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும். இந்த புதிய அஸ்டன் மார்ட்டின் கார் 4 பேர் பயணம் செய்யும் 2+2 சீட்டர் மாடலிலும், 2 பேர் பயணம் செய்யும்(2+0) சீட்டர் மாடலிலும் கிடைக்கும்.

அஸ்டன் மார்ட்டினின் வி8 வேண்டேஜ், டிபி9 மற்றும் வி12 வேண்டேஜ், ரேபிடே வரிசையில் இந்த புதிய காரும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 13, 2012, 12:32 [IST]
English summary
Aston Martin has revealed images and first official dynamic footage in a new promotional film. Do you like the Aston Martin Vanquish? If yes, what are your initial thoughts on the 2013 Aston Martin Vanquish.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+