ஹோண்டாவின் புதிய அமேஸ் செடான் கார்: பிரத்யேக படங்கள்

இன்னும் சில மாதங்களில் இந்திய மண்ணில் தடம் பதிக்க இருக்கும் ஹோண்டாவின் புதிய அமேஸ் செடான் கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலில் மட்டுமே அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டீசல் மாடல் இந்தியாவுக்காக மட்டுமான மாடலாக இருக்கும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன. இந்த புதிய காரின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பிரியோவை அடிப்படையாக கொண்டு இந்த புதிய காரை ஹோண்டா வடிவமைத்துள்ளது. எனவே, முன்புறம் அச்சு அசல் பிரியோதான். பின்புறம் மட்டும் செடான் காராக மாற்றப்பட்டிருக்கிறது. பிரியோ போன்று ஏமாற்றாமல் பின்புற வடிவமைப்பு சிறப்பாகவே இருக்கிறது. இதுவும் டிசையர் போன்று 4 மீட்டர் நீளத்துக்குள் வருகிறது.

சிட்டிக்கு போட்டி

சிட்டிக்கு போட்டி

மாருதி டிசையர் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியாக கூறப்பட்டாலும், இந்த புதிய கார் ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான சி்ட்டி செடானின் விற்பனையை பாதிக்கும் ஆபத்துக்கு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

எரிபொருள் கொள்ளளவு

எரிபொருள் கொள்ளளவு

இந்த காரில் 35 லிட்டர் கொள்ளளவு திறன்கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருக்கும்.

உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் அனைத்தும் பிரியோவை ஒத்ததாகவே இதன் உட்புறமும் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

75 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அமேஸ் வர இருக்கிறது. இதேபோன்று, ஜாஸ், பிரியோவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அமேஸை அறிமுகம் செய்ய உள்ளது ஹோண்டா.

எதிர்பார்க்கும் விலை?

எதிர்பார்க்கும் விலை?

ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய டீசல் காரை ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் செல்லும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, November 26, 2012, 10:25 [IST]
English summary
We take a closer look at Honda's latest offering the Brio ‘Amaze' Sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+