பிரியோ செடானுக்கு 'அமேஸ்' என நாமகரணமிட்ட ஹோண்டா
அடுத்த ஆண்டு அறிமுகமாகும் பிரியோ செடானுக்கு அமேஸ் என்று பெயரிட்டுள்ளது ஹோண்டா கார் நிறுவனம்.

ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பதால் அமேஸ் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. டிசையர் போன்று இந்த காரும் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் வரிச்சலுகையும் கிடைக்கும்.
1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய கார் வரும் 23 ந்தேதி தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்திய மார்க்கெட்டுக்கு இந்த புதிய என்ட்ரி லெவல் செடான் வர இருக்கிறது.
அமேஸ் டீசலிலும் வருவதால் தனது விற்பனை நல்ல வளர்ச்சி காணும் என்ற மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம். மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் உள்ளிட்ட கார்களுடன் அமேஸ் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








