புதிய பெட்ரோல் எஞ்சினுடன் அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி

By Saravana
Honda City
நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சினை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஞ்சின் அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் பொருத்தப்பட உள்ளது.

பெட்ரோல் எஞ்சின் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது ஹோண்டா. அந்த நிறுவனத்தினஅ ஐ-விடெக் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் எஞ்சின்கள் வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சினை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இலகு எடை கொண்டதோடு ஹோண்டாவின் எர்த் ட்ரீம் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய எஞ்சின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த கார்பன் புகையையும் வெளியிடும் அம்சங்களை இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கும்.

டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வர இருக்கும் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அடுத்த தலைமுறை சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் பொருத்தப்பட உள்ளது. தற்போது சிட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. ஆனால், புதிய எஞ்சின் 127 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 21, 2012, 10:43 [IST]
English summary
Honda has just showcased the 1.5 Liter-4 cylinder petrol engine that comes with direct injection. The new petrol engine will be powered to Next gen City and Jazz cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+