சிவிக் வாங்கலையோ சிவிக்...ரூ.1.6 லட்சம் அதிரடி சலுகை

உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள சிவிக் செடான் காருக்கு ரூ.1.6 லட்சம் தள்ளுபடி வழங்குவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

எக்ஸிகியூட்டிவ் செடான் மார்க்கெட்டில் சிவிக் கார் முன்னணி மாடல்களில் ஒன்றாக விளங்கியது. ஆனால், சமீபகாலமாக சிவிக் விற்பனை படுமோசமாக இருந்து வந்தது. இதையடுத்து, சிவிக் காருக்கு இந்தியாவில் மூடுவிழா நடத்தியுள்ளது ஹோண்டா.

சிவிக்

இந்தநிலையில், டீலர்களில் இருப்பு இருக்கும் சிவி்க் காருக்கு ரூ.1.6 லட்சம் வரையிலான தள்ளுபடி சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது. விலையில் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ்(காரை எக்ஸ்சேஞ்ச் செய்யாவிட்டாலும் உண்டாம்), இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ரூ.1.6 லட்சம் மதிப்புடைய சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது.

மொத்தத்தில் சிவிக் காரின் ஆன்ரோடு விலையில் 12 முதல் 14 விழுக்காடு அளவுக்கு தள்ளுபடியை பெற முடியும். 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சிவிக் கார் ரூ.12.59 லட்சம் முதல் ரூ.14.88 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 23, 2012, 15:17 [IST]
English summary
The Honda Civic, once the best selling executive sedan in India is on its way out. With customer favouring diesel cars and no diesel option available until a couple of years Honda has decided to discontinue selling the Civic sedan in India. However it still has sufficient stocks and is planning to clear it soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+