பிரியோ பிளாட்பார்மில் புதிய எம்பிவி: உறுதிப்படுத்திய ஹோண்டா
பிரியோவின் அடிப்படையில் புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. பிரியோ செடான் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அடுத்ததாக இந்த புதிய பிரியோ எம்பிவியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா தெரிவித்திருக்கிறது. இந்த புதிய எம்பிவி காரின் இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய பிரியோ எம்பிவி
பிரியோ ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் தாராள இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது.

ஹோண்டா ஃப்ரீடு எம்பிவி
முன்னதாக, ஜாஸ் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் படத்தில் இருக்கும் இந்த ஃப்ரீடு என்ற பெயர் கொண்ட எம்பிவியை ஹோண்டா அறிமுகப்படுத்த இருப்பதாக யூகத்தகவல்கள் வெளியாகின.

எப்போது அறிமுகமாகும்?
நாம் ஏற்கனவே தெரிவித்தபடி, அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிரியோ செடான் அறிமுகமாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து, 2014ம் ஆண்டில் இந்த காரை ஹோண்டா அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. முதலில் இந்தோனேஷியாவில் உள்ள ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

எஞ்சின் விபரம்
சிட்டி காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும், பிரியோ செடானில் பொருத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படலாம்.

யாருக்கு போட்டி?
மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இதனை நிலைநிறுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








