அமேஸ் காருக்கு ஸ்பெஷல் இணையதளம் துவங்கிய ஹோண்டா

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டுள்ள ஹோண்டா அமேஸ் காருக்கு பிரத்யேக இணைய தளத்தை முன்கூட்டியே திறந்துள்ளது. வர இருக்கும் இந்த புதிய காரில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இந்த பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணைய பக்கத்திற்கு செல்லும் முன் அமேஸ் பற்றிய சில தகவல்கள்: 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தி வரும் இந்த கார் லிட்டருக்கு 24 கிமீ வரை மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா. 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் வருகிறது. 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மாருதியின் ஸ்விப்ட் டிசையர் உள்ளிட்ட கார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டில் களமிறங்குகிறது.
ஹோண்டா அமேஸ் இணைய தள பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.


Click it and Unblock the Notifications








